ஃபிரிட்ஜில் இருந்த ஆண் சடலம்... போலீஸ் அதிர்ச்சி!!
ஃபிரிட்ஜில் இருந்த ஆண் சடலம்... போலீஸ் அதிர்ச்சி!!

ஆட்கள் இல்லாத வீட்டில் ஃப்ரிட்ஜூக்குள் ஆண் சடலம் ஒன்றை போலீஸார் கண்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் என்பவர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினர் அவரை பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ஜாகீர் தொலைப்பேசி அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் அங்குச் சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தபோது அதில் ஆண் சடலம் ஒன்று இருந்தை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த சடலம் குறித்து விசாரணை செய்தபோது, அங்கு வசித்து வந்த ஜாகீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த மர்ம மரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜூக்குள் ஆண் சடலம் ஒன்றை போலீஸார் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

