Theme Check

மருத்துவர்கள் திகைப்பு - மயங்கிய நிலையிலும் பப்ஜி விளையாடிய சிறுவன்...!!

மருத்துவர்கள் திகைப்பு - மயங்கிய நிலையிலும் பப்ஜி விளையாடிய சிறுவன்...!!

மருத்துவர்கள் திகைப்பு - மயங்கிய நிலையிலும் பப்ஜி விளையாடிய சிறுவன்...!!
X

17 வயது சிறுவன் ஒருவர் செல்போன் கேமுக்கு அடிமையாகியதன் காரணமாக மயக்க நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது போன்று வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அந்த சிறுவன் கையில் துப்பாக்கி வைத்து சுடுவதைப் போன்ற பாவனையை தொடர்ந்து செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த சிறுவனின் செய்கையை வைத்து சமூக வலைத்தளங்களில் பப்ஜி கேமுக்கு அடிமையான சிறுவனின் பரிதாப நிலை என பதிவிடப்பட்ட பரவி வருகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது,

கடந்த 5-ம் தேதி அதிகாலையில் நாங்குநேரி பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டதாகவும் முதற்கட்ட சிகிச்சை முடித்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த போது அவரது உறவினர்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் அழைத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதற்காக இந்த சிறுவன் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story
Share it