தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாட்டுக்கு சுட்ட சிறுவன்.. தாய் உயிரிழந்த சோகம் !!

தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாட்டுக்கு சுட்ட சிறுவன்.. தாய் உயிரிழந்த சோகம் !!

தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாட்டுக்கு சுட்ட சிறுவன்.. தாய் உயிரிழந்த சோகம் !!
X

தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன், தவறுதலாக சுட்டதில் சிறுவனின் தாயார் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில் வசிக்கும் டீஜா பென்னட் என்ற பெண் தனது 3 வயது மகனுடன் ஷாப்பிங் சென்றிருந்தார். ஷாப்பிங்கை முடித்துவிட்டு தனது மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, அவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்ட தயாராகிக் கொண்டிருந்தார்.

usa gun

இருவரும் வீட்டிற்கு காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவரது மகன், காரின் பின் இருக்கையில் இருந்த தனது தந்தையின் துப்பாக்கியை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனின் கையில் இருந்த துப்பாக்கி வெடித்துவிட்டது. இதனால் துப்பாக்கியிலிருந்து தவறுதலாக குண்டு வெளியேறி, காரின் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த பென்னட்டின் முதுகுப்பகுதியில் குண்டு பாய்ந்தது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக அருகிலிருந்த சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் அந்த சிறுவனின் தந்தை, ரோமல் வாட்சன் மீது குற்ற வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

usa gun

அதாவது, அவர் அவர் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியை காரில் கொண்டு சென்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவில் 2015 - 2021 க்கு இடைபட்ட காலத்தில், 2,070 குழந்தைகள் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர், இதன் விளைவாக 765 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it