காதலியை தனிமையில் சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்துக்கும் மின்சாரத்தை துண்டித்த காதலன்.!
காதலியை தனிமையில் சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்துக்கும் மின்சாரத்தை துண்டித்த காதலன்.!

காதலன் காதலியை சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்துக்கும் மின்சாரத்தை துண்டித்த ஒர் நிகழ்வு பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தின் கணேஷ்புர் என்ற கிராமத்தில் அடிக்கடி இரவு நேரங்களில் மின்சாரம் இரண்டு முதல் மூன்று மணிநேரத்திற்கு துண்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. தினமும் நடந்ததால் பொறுமை இழந்த கிராம மக்கள் ஒரு கட்டத்தில் மின் வாரிய ஊழியர்களிடம் புகார் கொடுத்து வாதிட்டிருக்கிறார்கள்.
ஆனால் மின்வாரிய தரப்பில் அப்படி மின் துண்டிப்பும் ஏதும் செய்யப்படவில்லை என தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து தினந்தோறும் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்தபோது தான் அக்கிராம மக்களுக்கு உண்மை தெரியவந்திருக்கிறது.
அதன்படி எலக்ட்ரீசியனான வாலிபர் ஒருவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.இருவரும் தனிமையில் சந்திப்பதற்காக மொத்த கிராமத்திற்கும் மின்சாரத்தை குறிப்பிட்ட நேரத்தில் துண்டித்திருக்கிறார். இதனை தொடர்ந்து செய்ததால் கையும் களவுமாக சிக்கினான் காதலன்.
இந்நிலையில் மீண்டும் மின்சாரத்தை துண்டித்துவிட்டு காதலன் அரசு பள்ளி ஒன்றில் நுழைந்து அங்கு தனது காதலியுடன் இருந்த போது அவர்களை கையும் களவுமாக பிடித்த கிராமத்தினர், அந்த நபரை மொட்டை அடித்து கிராமம் முழுவதும் உலா வர வைத்திருக்கிறார்கள்.

