100 ரூபாய் கொடுக்க மறுத்த அண்ணனை கொலை செய்த தம்பி!!
100 ரூபாய் கொடுக்க மறுத்த அண்ணனை கொலை செய்த தம்பி!!

அண்ணன் 100 ரூபாய் தர மறுத்ததால் அவரை தம்பியே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டம் பாய்ரிஹா கிராமத்தை சேர்ந்த பிரபுதயா பால் (50) என்பவரிடம் அவரது தம்பி தீன்தயா பால் (48) செலவுக்கு100 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
ஆனால், பணம் தர முடியாது என அண்ணன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி தீன்தயால், அண்ணன் பிரபுதயாலை கீழே பிடித்து தள்ளி கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.

தம்பியின் தாக்குதலில் அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த புதார் பகுதி காவல்துறை பிரபுதயால் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவடம் தொடர்பாக தம்பி தீன்தயாலை கைது செய்த காவவ்துறை அவரை சிறையில் அடைத்துள்ளது. தீன்தயால் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
newstm.in

