Theme Check

கொதிக்கும் பானி பூரி குருமாவில் தவறி விழுந்த குழந்தை!!

கொதிக்கும் பானி பூரி குருமாவில் தவறி விழுந்த குழந்தை!!

கொதிக்கும் பானி பூரி குருமாவில் தவறி விழுந்த குழந்தை!!
X

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அவரது மனைவி அனுஷியா (28) தங்கள் வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். அவர்களுக்கு ரிஷி (2) என்ற ஆண் குழந்தை இருந்தான்.

கடந்த வாரம் பானி பூரிக்கு குருமா குழம்பு தயார் செய்த பாத்திரத்தை கீழே வைத்திருந்த போது, அதில், குழந்தை ரிஷி தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தான்.

rishi

அம்மாசத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ரிஷி சிகிச்சை பலன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சூடாக இருந்த பானிபூரி குருமாவில், 2 வயது ஆண் குழந்தை ரிஷி, எதிர்பாராவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it