Theme Check

தாயின் கள்ளக்காதலனின் மர்ம உறுப்பை அறுத்த மகள் !!

தாயின் கள்ளக்காதலனின் மர்ம உறுப்பை அறுத்த மகள் !!

தாயின் கள்ளக்காதலனின் மர்ம உறுப்பை அறுத்த மகள் !!
X

தாயுடன் ஒன்றாக இருந்த கள்ளக்காதலனை பார்த்து ஆத்திரமடைந்த இளம்பெண் அவரது மர்ம உறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் தும்மலபாலயம் கிராமத்தில் ராமச்சந்திரா (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஐதா நகரை சேர்ந்தவர் சந்தியா (40) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சந்தியாவின் கணவர் இறந்து விட்டநிலையில், அவர் தனது 20 வயதில் மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சந்தியாவுக்கும், ராமச்சந்திராவுக்கும் கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரா அடிக்கடி சந்தியா வீட்டுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனை அறிந்த மகளுக்கு தாயையும் கள்ளக்காதலனையும் பலமுறை கண்டித்துள்ளார். என்றாலும் சந்தியா கள்ளக்காதலை கைவிடவில்லை.

vxc

வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரா மது அருந்திவிட்டு சந்தியா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் வீட்டின் மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவரும் அங்கேயே அசதியில் உறங்கிவிட்டனர். வீட்டில் அதிகாலையில் கண் விழித்த மகள், தாயை தேடி மாடிக்கு சென்றார். அப்போது கட்டிலில் ராமச்சந்திராவும், சந்தியாவும் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து கடும் ஆத்திரமடைந்தார். உடனே வீட்டில் இருந்த பிளேடை எடுத்து சென்று ராமச்சந்திரவின் மர்ம உறுப்பை அறுத்துள்ளார்.

இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். காயத்துடன் துடித்து கொண்டிருந்த ராமச்சந்திராவை மீட்டு, குண்டூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தெனாலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it