தாய்க்கு எமனாக மாறிய மகன் வளர்த்த நாய்!!
தாய்க்கு எமனாக மாறிய மகன் வளர்த்த நாய்!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பெங்காலி தோலா பகுதியை சேர்ந்த சுசீலா திரிபாதி (82) ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகன் அமீத் ஜிம் பயிற்சியாளராக உள்ளார்.
அமீத் பிட்புல் மற்றும் ஒரு லாப்ரடோர் ரக நாய்களை வளர்த்து வந்தார். இதில் பிரவுனி என்று அழைக்கப்பட்ட பிட்புல் ரக நாய் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது.
அமித்தின் தாயார் சுசீலா திரிபாதி வீட்டில் தனியாக இருந்துள்ளார், மகன் வழக்கம் போல் உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று விட்டார். அப்போது பிட்புல் நாய் தாயார் மீது பாய்ந்து அவரை கடித்துக் குதறியது.

அவர் கத்திக் கதறி உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் யாரும் வருவதற்குள் ரத்த வெள்ளத்தில் அந்தத் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த மகன் அமித், தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதிக ரத்தம் போனதால் தாயார் ஏற்கெனவே இறந்திருந்தார். கழுத்து முதல் வயிறு வரை 12 இடங்களில் நாய்க்கடித்துள்ளது.
வளர்ப்பு நாய்கள் பக்கத்து வீட்டுக்காரர்ளை கடிப்பது வழக்கம். ஆனால் சொந்த வீட்டில் இருப்பரையே கடித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

