Theme Check

குடத்திற்குள் தலை சிக்கியதால் அவதிப்பட்ட நாய்!!

குடத்திற்குள் தலை சிக்கியதால் அவதிப்பட்ட நாய்!!

குடத்திற்குள் தலை சிக்கியதால் அவதிப்பட்ட நாய்!!
X

கோவை அருகே குடத்திற்குள் தலை மாட்டிக் கொண்டதால் தெருநாய் ஒன்று அவதிபட்ட நிலையில், அதனை பொதுமக்கள் சாதுர்யமாக மீட்டனர்.

வெள்ளலூர் சந்தைக்கடை பகுதியில் தெருநாய் ஒன்று, அந்த பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் தலையை நுழைத்து தண்ணீர் குடிக்க முயன்றுள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக அதன் தலை குடத்தின் உள்ளே மாட்டிக்கொண்டது.

தலையை வெளியே எடுக்க முடியாததால் அந்த நாய் குடத்துடன் கண்மூடித்தனமாக சாலையில் சுற்றித் திரிந்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த நாய் சிரமப்பட்டது.

dog

இதைக்கண்ட, அந்த பகுதியை சேர்ந்த இருவர் நாயை பிடித்து பிளாஸ்டிக் குடத்தை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், தலையை வெளியே எடுக்க முடியவில்லை. இதனை அடுத்து, குடத்தை கத்தியால் அறுத்து, நாய்க்கு விடுதலை கொடுத்தனர்.

குடத்தில் தலை மாட்டியதால் மிரண்டு போயிருந்த அந்த நாய், அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. இந்நிலையில், குடத்தில் நாயின் தலை மாட்டிக்கொண்டு, அதனை மீட்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரானது.

newstm.in

Next Story
Share it