Theme Check

ஜூன்ஸ் பேண்ட் அணிந்ததால் சிறுமியை அடித்து கொலை செய்த குடும்பம்!!

ஜூன்ஸ் பேண்ட் அணிந்ததால் சிறுமியை அடித்து கொலை செய்த குடும்பம்!!

ஜூன்ஸ் பேண்ட் அணிந்ததால் சிறுமியை அடித்து கொலை செய்த குடும்பம்!!
X

ஜூன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்று 17 வயது சிறுமியை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் தயோரியா மாவட்டத்தை சேர்ந்த நேஹா பஸ்வான் (17) என்ற சிறுமியின் தந்தை அமர்நாத் பஸ்வான் பஞ்சாபில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதனால், அமர்நாத்தின் மனைவி மாமனார் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.

அமர்நாத்தின் நான்கு சகோதரர்கள் ஒரே வீட்டிலே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், சிறுமி நேஹாவை, அவரது மூன்று பெரியப்பாக்களும், தாத்தாவும் சேர்ந்து அவர்களது துணிகளை துவைத்து கொடுக்கும்படி கேட்டுள்ளனர். இதற்கு சிறுமி நேஹா மறுப்பு தெரிவிக்கவே, அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

woman attack

மேலும் நேஹாவை ஆடை கட்டுப்பாடுடன் இருக்கும் படி கூறியும், ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது எனக்கூறியும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நேஹாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியை அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனாலும் அவர் வழியிலே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் சடலத்தை பட்னாவா பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசிவிட்டு அவர்கள் வீடு திரும்பினர். இதையடுத்து, நேஹாவின் தாய் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

murder 1

அதில், ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என தனது மகளை மாமனார் மற்றும் பெரியப்பாக்கள் சேர்ந்து தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதனாலே தனது மகள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி நேஹாவின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததும், அவரது தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அவரின் தாத்தா, பெரியப்பா உள்ளிட்ட 10 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it