மிஸ் இந்தியா போட்டியில் இருந்து திடீரென விலகிய பிரபல வாரிசு நடிகை!!
மிஸ் இந்தியா போட்டியில் இருந்து திடீரென விலகிய பிரபல வாரிசு நடிகை!!

மிஸ் இந்தியா போட்டியில் தமிழ்நாடு சார்பில் நடிகை ஷிவானி ராஜசேகர் பங்கேற்க இருந்த நிலையில், திடீரென தாம் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான ஜீவிதா ராஜசேகர் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருக்கும் போது தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் 'அன்பறிவு' படத்தில் நடித்து கவனம் ஈர்த்த இவர், அண்மையில் வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர், திரைப்படத்துக்கு வருதற்கு முன்பு அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று வந்தார்.

பெமினா மிஸ் இந்தியா படத்தை வென்றிருந்த அவர், தமிழ்நாடு சார்பில் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க இருந்தார். ஆனால் திடீரென அதில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்துள்ளார். மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மலேரியாவால் பாதிக்கப்பட்டுவிட்டதால், அழகு போட்டிக்கான பயிற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. மருத்துவ படிப்பிற்கான எழுத்துத் தேர்வு மற்றும் அடுத்த மாதம் செய்முறை தேர்வும் இருக்கிறது.
அதனால் இந்த ஆண்டு நடைபெறும் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு நிச்சயம் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரின் திடீர் அறிவிப்பால் இந்த ஆண்டு மிஸ் இந்தியா போட்டில் தமிழ்நாடு சார்பில் யாரும் கலந்து கொள்ள இயலாத சூழல் நிலவுகிறது.
newstm.in

