காலை உணவு கொடுக்காத மருமகளை சுட்டுக்கொன்ற மாமனார்!!
காலை உணவு கொடுக்காத மருமகளை சுட்டுக்கொன்ற மாமனார்!!

தேநீருடன் காலை உணவு கொடுக்காத மருமகளை மாமனார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ரபோடி ருத்து பார்க் பகுதியை சேர்ந்த சீமா பாட்டீல் (42) என்பவரின் மாமனார் காசிநாத் (76) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை சீமா தன் மாமனாருக்கு தேநீர் கொடுத்து உள்ளார்.
ஆனால் காலை உணவு கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காசிநாத் மருமகள் சீமாவுடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து மருமகள் சீமாவை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இதில் வயிற்றில் குண்டு பாய்ந்து சீமா படுகாயமடைந்தார். உடனே காசிநாத் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். படுகாயமடைந்த சீமாவை மற்ற குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அடிவயிற்றில் ஆழமாக குண்டு இறங்கியதால் சிகிச்சை பலனின்றி சீமா உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காசிநாத் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

காசிநாத்தை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவரே முன்வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காசிநாத்தை காவலில் எடுத்த காவல்துறையினர் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

