Theme Check

வேறு சாதி என்பதால் மாப்பிள்ளையை சுட்டுக்கொன்ற மாமனார்!! VIDEO

வேறு சாதி என்பதால் மாப்பிள்ளையை சுட்டுக்கொன்ற மாமனார்!! VIDEO

வேறு சாதி என்பதால் மாப்பிள்ளையை சுட்டுக்கொன்ற மாமனார்!! VIDEO
X

மகள் வேற்று சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், ஆத்திரமடைந்த தந்தை பட்டப்பகலில் மாப்பிள்ளையை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் தும்ராவ்ன் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுனில் பதக் என்பவரின் மகள், அதே ஊரைச் சேர்ந்த கவுன்சிலர் சோனு ராயின் சகோதரர் மோனு ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மோனு ராய் வேற்று சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தந்தை சுனில் பதக் சம்மதமில்லாமல் இந்த திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. திருணமாகி ஒரு வருடம் ஆன பிறகும் தந்தை சுனில் ஆத்திரடத்துடன் இருந்து வந்துள்ளார்.

bihar shoot

இந்நிலையில் மகன் தனு பதக் உதவியுடன் சலூன் கடையில் வைத்து தனது மருமகனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். கையில் துப்பாக்கியுடன் தனு சலூன் கடையில் காத்திருந்தார். அப்போது மோனு ராய் முடிவெட்ட சலூன் கடைக்கு வந்திருந்தார்.

திடீரென தனு மோனுவின் தலையில் சுட்டார். அவர் சுதாரித்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓட முயற்சிக்க, அப்போது அங்கு வந்த சுனில், மோனுவை தடுத்து கடைக்குள் இழுத்துச் சென்றார்.


பின்னர் இருவரும் மோனுவை சரமாரியாக சுட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மோனு சலூன் கடையிலேயே உயிரிழந்தார். இந்த கொடூரச் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

சுனில் துப்பாக்கியுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அவர் மகன் தப்பி ஓடியதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் ஒரு வருட காலம் காத்திருந்து பட்டப்பகலில் ஆணவக் கொலையை நிகழ்த்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it