Theme Check

அம்மனாக மாறிய பெண் அமைச்சர்!! VIDEO

அம்மனாக மாறிய பெண் அமைச்சர்!! VIDEO

அம்மனாக மாறிய பெண் அமைச்சர்!! VIDEO
X

மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா வெளியிட்ட அவரது அம்மன் வடிவிலான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள். இவர் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

chandra priyanka

பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே இவர் விழிப்புணர்வு குறும்படத்திலும் நடித்துள்ளார். இவர் தனது உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடியோ சில நாட்களுக்குமுன் வைரலானது.

இந்நிலையில், அமைச்சர் சந்திரபிரியங்காவை, ஆரத்தி எடுத்து வரவேற்கும் பெண்கள், அவருக்கு மேக்கப் செய்து அம்மன் அவதாரத்தில் அலங்கரிக்கின்றனர். பின்னர் அவர் அம்மன் போல அமர்ந்து அருள்பாலிப்பது போல வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


newstm.in

Next Story
Share it