Theme Check

வலிமை திரைப்படக் காட்சிகளை நீக்கிய படக்குழு.. இன்று முதல் வெளியீடு !!

வலிமை திரைப்படக் காட்சிகளை நீக்கிய படக்குழு.. இன்று முதல் வெளியீடு !!

வலிமை திரைப்படக் காட்சிகளை நீக்கிய படக்குழு.. இன்று முதல் வெளியீடு !!
X

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் திடீர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஹெச்,வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை. நீண்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய இந்தப் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார். கொரோனா காரணமாக சில காலம் இப்படம் வெளியிடப்படாமல் இருந்தது.

valimai

இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி இப்படம் உலகளவில் வெளியானது. தமிழக அளவில் 1000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. தமிழகத்தில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை இத்திரைப்படம் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் அதிரடியாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் வேண்டுமென்றே சென்டிமென்ட் காட்சிகள் உள்ளதாகவும் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
valimai
இந்த திரைப்படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு 12.50 நிமிடக் காட்சியை நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 55 நிமிடம் உள்ள இந்தத் திரைப்படத்தின் நாங்க வேற மாறி பாடல் காட்சியும் நீக்கப்பட உள்ளது. காட்சிகள் நீக்கப்பட்ட படமானது இன்றுமுதல் திரையிடப்பட உள்ளது.

வலிமை திரைப்படத்துக்கு உலக அளவில் முதல் நாளில் ரூ.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், தமிழக அளவில் முதல் நாளில் 35 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

Next Story
Share it