கப்பல் படைக்கு தலைமை ஏற்கும் முதல் படுகர் இனப்பெண்!!
கப்பல் படைக்கு தலைமை ஏற்கும் முதல் படுகர் இனப்பெண்!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அச்சனக்கல் பகுதியைச் சோ்ந்த ரவீந்திரநாத் நாடு முழுவதும் ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றியுள்ளார். அவர் தனது மகள் மீராவை பணி மாறுதலாகி செல்லும் ஊா்களுக்கு எல்லாம் அழைத்துச்சென்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே படிக்க வைத்தார்.
இவா் கோவையில் பணிபுரிந்தபோது தனது மகள் மீராவை அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார். இந்நிலையில், மீராவுக்கு இந்திய ராணுவத்தில் சோ்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
இதற்காக அவர் கடந்த ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த ராணுவப் பணிகளுக்கான தோ்வினை எழுதினார். அதில் மீரா கப்பல் படைக்கான பிரிவில் தோ்ச்சி பெற்றார். இதைத் தொடா்ந்து, மீராவுக்கு கேரள மாநிலம் கண்ணூா் அருகே உள்ள எஜிமாலா கப்பல் படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

6 மாதம் பயிற்சியில் பங்கேற்றார். பயிற்சிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் மீரா விரைவில் கப்பல் படைக்கு அதிகாரியாக தலைமை ஏற்க உள்ளார். பயிற்சியை முடித்த அவர் தனது பெற்றோருடன், தனது சொந்த ஊரான நீலகிரியில் உள்ள அச்சனக்கல்லுக்கு வந்தார்.
அங்கு அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடந்தது. இதனிடையே கிராமத்தில் தனது தாய் தந்தை மீராவுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
newstm.in

