வேலைக்கு சேர்ந்த முதல் நாளே... உலை வைத்துக்கொண்ட ரஷ்ய அதிகாரி!

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே... உலை வைத்துக்கொண்ட ரஷ்ய அதிகாரி!

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே... உலை வைத்துக்கொண்ட ரஷ்ய அதிகாரி!
X

ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் நகரத்தில் உள்ள போரிஸ் யெல்ட்சின் பிரெசிடெண்ட்ஷியல் சென்டரில் சோவியத் யூனியன் காலத்தில் வரையப்பட்ட 'Three Figures' (மூன்று உருவங்கள்) என்ற ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

அன்னா லெபோர்ஸ்கயா எனும் புகழ்பெற்ற ரஷ்ய கலைஞரால் வரையப்பட்ட இந்த ஓவியம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 7.53 கோடி ரூபாய்) என கூறப்படுகிறது.

விலையுயர்ந்த இந்த ஓவியத்தில், 60 வயதாகும் அந்த பாதுகாவல் அதிகாரி, கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், ஒரு பால் பாயிண்ட் பேனாவால் கண்களை வரைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதுவும் அங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் இந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அதிகாரிக்கு அபராதமும் 3 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

ஓவியத்தை மீண்டும் சீரமைக்க சுமார் 3,300 டாலர் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஓவியம் 1 மில்லியன் டாலருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it