Theme Check

குடும்பத்தில் முதல் பெண் குழந்தை.. ஹெலிகாப்டரில் அழைத்து வந்த தந்தை..!

குடும்பத்தில் முதல் பெண் குழந்தை.. ஹெலிகாப்டரில் அழைத்து வந்த தந்தை..!

குடும்பத்தில் முதல் பெண் குழந்தை.. ஹெலிகாப்டரில் அழைத்து வந்த தந்தை..!
X

புனேவில், தங்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று உற்சாக வரவேற்பு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் ஜரேகர். வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
First Baby Girl of Indian Family brought Home in Helicopter | DESIblitz
இவருடைய மனைவிக்கு கடந்த ஜனவரி மாத 22-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, போசாரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

அவர்களின் குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தையே இல்லை. முதன்முறையாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இதையடுத்து, போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் குழந்தையையும், மனைவியையும் விஷால் ஜரேகர் அழைத்து வந்தார். விஷால் ஜரேகரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it