உரிமையாளராக எலான் மஸ்க் பதிவிட்ட முதல் ட்வீட்..!!

உரிமையாளராக எலான் மஸ்க் பதிவிட்ட முதல் ட்வீட்..!!

உரிமையாளராக எலான் மஸ்க் பதிவிட்ட முதல் ட்வீட்..!!
X

ட்விட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு ட்விட்டர் நிறுவனம் சம்மதித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை, இந்த ஒப்பந்தம் இறுதியானது.

ஏற்கனவே ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தனது முதல் ட்வீட்டை அவர் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், “எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் பதிவிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், “சுதந்திரமான பேச்சு என்பது ‘செயல்பாட்டில் இருக்கும் ஜனநாயகத்தின் அடித்தளம்’ ஆகும்.

மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான முக்கியமான விஷயங்கள் ட்விட்டரில் விவாதிக்கப்படுகின்றன.புதிய அம்சங்களுடன் ட்விட்டரை மேம்படுத்துவதன் மூலம், ட்விட்டரை முன்னெப்போதும் விட, சிறந்ததாக ஆக்க விரும்புகிறேன்.ட்விட்டரில் வைரஸ் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலமும், எல்லா மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும், ட்விட்டரை சிறந்ததாக்க விரும்புகிறேன்.

ட்விட்டரில் ‘மிகப்பெரிய ஆற்றல்’ உள்ளது. அதனை வெளிக்கொண்டு வர, இந்த நிறுவனத்துடனும் அதன் பயனர்களின் சமூகத்துடனும் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.


Tags:
Next Story
Share it