Theme Check

ஜோதிடர்களை விரட்டி பிடித்த வனத்துறையினர்.. காரணம் என்ன தெரியுமா..?

ஜோதிடர்களை விரட்டி பிடித்த வனத்துறையினர்.. காரணம் என்ன தெரியுமா..?

ஜோதிடர்களை விரட்டி பிடித்த வனத்துறையினர்.. காரணம் என்ன தெரியுமா..?
X

மாமல்லபுரம் பகுதியில், சுற்றுலா பயணிகளுக்கு கிளி ஜோசியம் பார்த்து வந்த 7 பேரை விரட்டி பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில் இருந்து பிடித்து வரப்பட்ட கிளிகளின் இறக்கைகளை வெட்டி, அவைகளை கூண்டுகளில் அடைத்து வைத்து ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறைக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, திருப்போரூர் வனச்சரக அலுவலர் ப.கல்யாண் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் மாமல்லபுரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரம் அமர்ந்து கிளிகளை கூண்டில் அடைத்து வைத்து சிலர் சுற்றுலா பயணிகளுக்கு ஜோசியம் பார்த்து வந்ததைக் கண்டுபிடித்தனர்.

வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் கிளி கூண்டுடன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த வனத்துறையினர், அவர்களை திருப்போரூர் வனத்துறை அலுவலகத்திற்கு கூட்டிச் சென்றனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சுப்பிரமணியன் (60), தங்கமாரி(50), வள்ளிநாயகம் (29), மாரியப்பன் (43), முப்புடாதி (36), குமார் (40), பரமசிவன் (55) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்கள் 7 பேர் மீதும் வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிளிகளை விடுவித்தனர்.

Next Story
Share it