Theme Check

பள்ளிக்கு போகக்கூடாது என்று பட்டியலின மாணவியை தாக்கிய கும்பல்!!

பள்ளிக்கு போகக்கூடாது என்று பட்டியலின மாணவியை தாக்கிய கும்பல்!!

பள்ளிக்கு போகக்கூடாது என்று பட்டியலின மாணவியை தாக்கிய கும்பல்!!
X

பள்ளிக்கு சென்று படிக்கக் கூடாது என்று 16 வயது மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் ஷஜபூர் பகுதியில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அவரது கிராமத்திற்கு அருகே உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிந்த போது, வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு கும்பல் வழி மறித்தது.

அவரிடம் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் படிக்க கூடாது என்று மிரட்டியுள்ளனர். அதோடு அந்த சிறுமியின் புத்தக பையை பிடிங்கி, உனது கிராமத்தில் இருக்கும் மற்ற சிறுமிகள் போல், நீயும் பள்ளி செல்லக்கூடாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பயந்துகொண்டே வீட்டிற்கு சென்ற மாணவி, சம்பவத்தை பற்றி தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இதை கேட்டு கோபமடைந்த மாணவியின் சகோதரன், சம்பவம் குறித்து அந்த கும்பலிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார்.


அப்போது மாற்று சமுகத்தை சேர்ந்த அந்த கும்பல், எங்களையே எதிர்த்து பேசுகிறாயா என்று கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தாரையும் தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த மாணவி இந்த சம்பவம் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்தனர். அதாவது அந்த மாணவியை மிரட்டி, அவரது குடும்பத்தாரை தாக்கிய 7 பேர் கொண்ட கும்பல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it