வெளிநாட்டவர்களை குறிவைத்து ரூ.170 கோடி ஏமாற்றிய கும்பல்!!
வெளிநாட்டவர்களை குறிவைத்து ரூ.170 கோடி ஏமாற்றிய கும்பல்!!

வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடமிருந்து இணையமோசடி மூலம் ரூ.170 கோடியை ஏமாற்றிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கரண் மோகன் மற்றும் வினோத் சிங் ஆகிய இருவரும் நொய்டாவில் 10 பேர் கொண்ட போலி தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தியுள்ளனர். அவர்கள் அதிநவீன மென்பொருட்களைப் பயன்படுத்தி வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணினிகளை கட்டுப்படுத்தினர்.
பின்னர் சம்மந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு, அந்த தவறுகளை நீக்குவதாக கூறி அதற்கு கட்டணம் வாங்கியுள்ளனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, லெபனான் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் இவர்களின் இந்த செயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், விசாரணை நடத்தியபோது அது இணையமோசடி என தெரியவந்தது. இந்த மோசடிக்கு மூளையாக இருந்தவர்கள் கரண் மோகன் மற்றும் வினோத் சிங் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் விரைந்து செய்யப்பட்டு மோசடி கும்பலை சேர்ந்த துருவ் நரங், மயங்க் கோகியா, அக்ஷய் மாலிக், தீபக் சிங், அஹுஜா பொட்வால், அக்ஷய் சர்மா, ஜெயந்த் சிங், முகுல் ராவத் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

மேலும் இந்த மோசடியில் யாராருக்கு தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர். 10 பேர் கொண்ட இந்த கும்பலிடமிருந்து 70 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் பல மொபைல் போன்கள், சிம் கார்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
newstm.in

