Theme Check

மக்கள் உதவியுடன் 60 அடி இரும்பு பாலத்தை திருடிய கும்பல்!!

மக்கள் உதவியுடன் 60 அடி இரும்பு பாலத்தை திருடிய கும்பல்!!

மக்கள் உதவியுடன் 60 அடி இரும்பு பாலத்தை திருடிய கும்பல்!!
X

பீகார் மாநிலம், நஸ்ரிகஞ்ச் பகுதியில் 60 அடிக்கு இரும்பு பாலம் ஒன்று இருந்தது. இந்தப் பாலம் 1972ஆம் ஆண்டு கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் இந்தப் பாலத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாமல் இருந்தனர்.

மேலும் இதன் அருகிலேயே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாழடைந்த இரும்பு பாலத்தை அரசு அதிகாரிகள் என கூறிக் கொண்டு சிலர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்துக் கொண்டிருந்தனர்.

bihar

மேலும் பாலத்தை அகற்றுவதற்கு கிராம மக்களும் அவர்களுக்கு உதவி செய்தனர். பின்னர் மூன்று நாட்களில் பாலத்தை முழுமையாக இடித்துவிட்டு இரும்பு துண்டுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றது.

அந்தப் பாலத்தை இடித்து அதன் இரும்புத் துண்டுகளை எடுத்துச் சென்றவர்கள் அரசு அதிகாரிகள் அல்ல கொள்ளையர்கள் என்று பிறகுதான் தெரிந்தது. தங்கள் கண்முன்னே நடந்த பயங்கர திருட்டால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு பாலத்தின் இரும்புகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.

newstm.in

Next Story
Share it