Theme Check

புல்டோசர் கொண்டு ஏடிஎம் மெஷினை தூக்கி கொள்ளை அடித்த கும்பல்!! VIDEO

புல்டோசர் கொண்டு ஏடிஎம் மெஷினை தூக்கி கொள்ளை அடித்த கும்பல்!! VIDEO

புல்டோசர் கொண்டு ஏடிஎம் மெஷினை தூக்கி கொள்ளை அடித்த கும்பல்!! VIDEO
X

மகாராஷ்டிர மாநிலம் சங்க்லீ பகுதியில் தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியின் .டி.எம் மையத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளையர்கள் .டி.எம் மிஷினில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்காக மையத்தில் இருந்த .டி.எம். மிஷினையே புல்டோசர் வாகனத்தை கொண்டு பெயர்த்து எடுத்துச் சென்றனர்.

இது .டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் .டி.எம் மிஷினை கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட புல்டோசர் வாகனம் பெட்ரோல் நிலையத்தில் இருந்து திருடப்பட்டது என கண்டுபிடித்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட .டி.எம். மிஷினில் 27 லட்சம் ரூபாய் இருந்தது. தற்போது இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it