ஒரு காலால் குதித்து குதித்து பள்ளிக்கு செல்லும் சிறுமி!!
ஒரு காலால் குதித்து குதித்து பள்ளிக்கு செல்லும் சிறுமி!!

ஒரு காலால் குதித்துக் குதித்து சிறுமி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடல் பாதிப்பு கல்விக்கு ஒரு தடையல்ல என்பதற்கு இந்த சிறுமி சிறந்த உதாரணம். வீடியோவில் இடம் பெற்றுள்ள சிறுமி பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த சீமா. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்தார்.
ஆனாலும் அவர் கல்வி மீது கொண்ட ஆர்வத்தாலும், தன்நம்பிக்கையாலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ஒரு காலில் குதித்துக் குதித்து தினமும் சென்று வருகிறார்.
This girl of #Bihar goes to school after traveling 1KM on one foot in #Jamui. God willing she gets some scholarship for higher education.#india pic.twitter.com/R4Ybbc0PIF
— Backchod Indian (@IndianBackchod) May 25, 2022
அவரின் கல்வி ஆர்வத்தைப் பார்த்து ஆசிரியர்கள் மாணவி சீமாவிற்கு உதவியாக இருந்து வருகின்றனர். மாணவி சீமாவிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் பலரும் பாராட்டி வாழ்த்து வருகின்றனர்.
மேலும் மாணவிக்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாணவி பள்ளிக்கு சென்றுவர வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும், கல்விச் செலவுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in

