நடுரோட்டில் அடாவடி செய்த இளம்பெண்... அதுவும் போலீஸிடம்... வைரலாகும் வீடியோ..!!
நடுரோட்டில் அடாவடி செய்த இளம்பெண்... அதுவும் போலீஸிடம்... வைரலாகும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை சாலையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தனது 2 தோழிகளுடன் மும்பையில் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொண்டு ஓலா வண்டியில் சென்றபோது, அதிக குடியில் இருந்த பெண் ஒருவர், கேப் டிரைவர் தள்ளிவிட்டு காரை இயக்க முயன்றுள்ளார். இதனால் கேப் டிரைவருக்கும் அந்த பெண்ணுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் இதைக்கண்டு சம்வப இடத்திற்கு வந்தபோது, போலீசாரை நோக்கி வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த இளம்பெண் ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்ட துவங்குகிறார். மேலும், போலீஸ் அதிகாரியை சீண்டி அவரின் தலை முடியை பிடித்து இழுத்து, எட்டி உதைக்க முயற்சி செய்கிறார். போலீஸ்காரர் அணிந்திருந்த மாஸ்கை கழற்றி அதனை கிழிக்கவும் முயற்சிக்கிறார்.
ஒரு கட்டத்தில், நடு ரோட்டில் படுத்துக்கொண்டு உருண்ட அந்த பெண்ணின் அநாகரீகமான செயல்களை அங்கிருந்த வாகன ஓட்டுநர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதற்கிடையே, போலீசார் ஊடகங்களை அழைத்தாலும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று அந்த பெண் துணிச்சலாக சவால் விட்டார்.
இதையடுத்து, குடிபோதையில் பொது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததற்காக மூன்று பெண்கள் மீதும் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A thread of 11 videos, drunk girl abusing everyone including Police
— Kungfu Pande 🇮🇳2.0 (@pb3060) June 19, 2022
Video 1 pic.twitter.com/SC4AGM7h5j

