Theme Check

தினசரி கோலம் போடும் சிறுமி.. குவியும் வாழ்த்தும் பாராட்டும் !

தினசரி கோலம் போடும் சிறுமி.. குவியும் வாழ்த்தும் பாராட்டும் !

தினசரி கோலம் போடும் சிறுமி.. குவியும் வாழ்த்தும் பாராட்டும் !
X

தனது வீட்டின் முன் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது குற்றம் என்ற வாசகத்தை தினசரி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தி வருகிறார் பள்ளி மாணவி.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் வேட்புமனு பரிசீலனையும் நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஆட்டம், பாட்டம், காலில் விழுவது என பழைய நடைமுறைகள் சென்று வித்தியாசமான முறையில் வாக்குசேகரித்து வருகின்றனர்.

money

மேலும், தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலர் தாங்கள் வெற்றிபெற பணம் விநியோகம் செய்து மக்களை விலைக்கு வாங்குவர். இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இந்த சிறுமி.

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் என்ற சுயேச்சை வேட்பாளரின் 8 வயது பள்ளி மாணவியான உஷா தனது வீட்டின் முன்பாக ஓட்டிற்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் எனவும், நமது வாக்கு விற்பனைக்கு அல்ல; என்ற விழிப்புணர்வு வாசகத்தை கோலமாக வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
money
இதேபோன்று தேர்தல் முடியும் நாளான 19ஆம் தேதி வரை வீட்டின் முன்பாக கோலம் வரையவுள்ளதாக மாணவி உஷா தெரிவித்துள்ளார்.மாணவியின் விழிப்புணர்வு முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it