தனது ஆணுறையில் ஓட்டை போட்ட காதலி.. தண்டனை வாங்கி கொடுத்த காதலன்..!!

தனது ஆணுறையில் ஓட்டை போட்ட காதலி.. தண்டனை வாங்கி கொடுத்த காதலன்..!!

தனது ஆணுறையில் ஓட்டை போட்ட காதலி.. தண்டனை வாங்கி கொடுத்த காதலன்..!!
X

மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நீதிமன்றத்தில், தனது துணைவரின் ஆணுறைகளை வேண்டுமென்றே சேதப்படுத்திய பெண்ணுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வினோத வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது, “வழக்கத்திற்கு மாறான இந்த வழக்கு ஜெர்மனியின் சட்ட வரலாற்று புத்தகங்களில் ஒன்றாகும். இது குற்றவியல் திருட்டுத்தனத்தின் நிகழ்வைக் குறிக்கிறது. ஆனால் இந்த முறை, இது ஒரு பெண்ணால் நடத்தப்பட்டது” என்றார்.

இந்த வழக்கு 42 வயது ஆணுடன் தாம்பத்ய உறவில் இருந்த 39 வயதான பெண் தொடர்புடையது. இருவரும் 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைனில் சந்தித்து, பின்னர் பாலியல் ரீதியான உறவைத் தொடங்கி உள்ளனர்.

வழக்கில் உள்ள அறிக்கைகளின்படி, அந்த ஆண் உறுதியான உறவில் இருக்க விரும்பவில்லை என்பதை அறிந்திருந்தும், அந்த பெண் தனது துணைவரிடம் ஆழ்ந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டார். ஒரு நாள் இருவரும் தாம்பத்ய உறவில் இருந்தபோது, அந்த பெண் தனது துணைவர் பயன்படுத்திய ஆணுறையில் ரகசியமாக துளையிட்டார். இதன்மூலம், அவர் கர்ப்பமாவார் என்று நம்பிய அவருக்கு முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு பிறகு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்பினார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பதாக நம்புவதாகக் கூறியதுடன், தான் வேண்டுமென்றே ஆணுறைகளை சேதப்படுத்தியதாகவும் கூறினார்.

இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான அந்த நபர், என் விருப்பமில்லாமல் இப்படி செய்தாய், உன்னுடைய இந்த விபரீத செயலை என்னால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவே முடியாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றத்தில் அந்த பெண் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அந்த பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

Tags:
Next Story
Share it