மகிழ்ச்சியான செய்தி... 50 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு!!
மகிழ்ச்சியான செய்தி... 50 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு!!

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாளர் லட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் மதிய உணவு இடைவெளியின் போது, பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவுத்தொகை 130 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும், விடுமுறை நாட்களில் பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவு தொகை 250 ரூபாயிலிருந்து இரண்டு மடங்காக உயர்த்தி 500 ரூபாயாகவும் கடந்தாண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

50 சதவீதம் ஊதிய உயர்வு நிலுவைத்தொகை மற்றும் ஈட்டிய விடுப்பு வித்தியாச நிலுவை தொகை நிதி நிலைக்கு ஏற்ப வழங்க பரிசீலனை செய்யப்படும். அரசுக்கு இணையான வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுபடி வழங்க அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சரக்கு இருப்பு பரிசோதனை செய்யப்படும் போது, ஒரு நிதியாண்டில் சரக்கு இருப்பு குறைவு படி விற்பனையில் 0.15 சதவீதம் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வழங்க அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

