மகிழ்ச்சியான செய்தி அறவித்த அரசு!! இனி ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசம்!!
மகிழ்ச்சியான செய்தி அறவித்த அரசு!! இனி ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசம்!!

2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். அதில் 2022-23ஆம் நிதியாண்டுக்கு 6.15 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்காக 39,181.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்ய மந்திரி கிரிஷக் துர்காதன கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டிலேயே 12 லட்சம் உட்பட அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை மாணவர்களுக்கு விநியோகிக்க அரசு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
தேர்தல் அறிக்கையின்படி, விவசாயிகளுக்கு வசதியாக, ‘பிரதான் மந்திரி குசும் யோஜனா’ திட்டத்தின் கீழ், 2022-23ஆம் நிதியாண்டில் 15,000 சோலார் பம்புகள் பொருத்தப்படும். மேலும் விவசாயிகளுக்கு 60.20 லட்சம் குவிண்டால் விதைகள் விநியோகிக்கப்படும். 119.30 லட்சம் மெட்ரிக் டன் உரமும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவரை அரசு வேலை, அல்லது சுயதொழில் ஆகியவற்றுடன் இணைக்க ஒரு கணக்கெடுப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் பயனாளிகளின் குடும்பங்களுக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கை பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.

