நிலக்கரி வாங்க அரசிடம் பணமில்லை.. 18 மணிநேரம் மின்வெட்டால் மக்கள் தவிப்பு

நிலக்கரி வாங்க அரசிடம் பணமில்லை.. 18 மணிநேரம் மின்வெட்டால் மக்கள் தவிப்பு

நிலக்கரி வாங்க அரசிடம் பணமில்லை.. 18 மணிநேரம் மின்வெட்டால் மக்கள் தவிப்பு
X

பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

இலங்கையை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. பாகிஸ்தானில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் இந்த பொருளாதார நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இதன் பிடியில் பாகிஸ்தான் சிக்கித் தவித்து வருகிறது.

factory

இந்த பொருளாதார நெருக்கடி அரசியலிலும் எதிரொலித்து இம்ரான் கான் பதவி விலக நேர்ந்தது. புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்று, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் பணியில் அவர் இறங்கியுள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 185 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது.

பாகிஸ்தானில் நிலக்கரி வாங்க அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் கடுமையான மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி ஆலைகளில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியவில்லை. இதனால், வழக்கத்தைவிட சுமார் 6,000 முதல் 7,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

factory

நகர்ப்புற மையங்கள் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும், கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள் முதல் தொழிற்சாலைகள் வரை பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அதிகரிக்கும் கோடை வெப்பம் மற்றும் மின் தேவையின் காரணமாக மின்வெட்டு மேலும் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரமும் இல்லாததால் பொருளாதார பாதிப்பும் உருவெடுத்து வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it