ராகுல் காந்திக்கு சொத்தை எழுதி வைத்த மூதாட்டி !!
ராகுல் காந்திக்கு சொத்தை எழுதி வைத்த மூதாட்டி !!

மூதாட்டி ஒருவர் ராகுல் காந்திக்கு தனது மொத்த சொத்தையும் எழுதிவைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்திஉள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி புஷ்பா முன்ஜியால். இவர் தனது 50 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும், 10 டோலா தங்கத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார். 10 டோலா என்பது சுமார் 116 கிராம் தங்கம் ஆகும். புஷ்பா முன்ஜியால் டெஹ்ராடூன் நீதிமன்றத்தில் தனது சொத்துக்களின் உரிமையை ராகுல் காந்திக்கு அளித்து உயிலை தாக்கல் செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் எண்ணங்களால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அதனால்தான் தனது சொத்தை அவருக்கு வழங்குவதாகவும் கூறிய புஷ்பா முன்ஜியால், ராகுல் காந்தியும், அவரது யோசனைகளும் நாட்டுக்கு அவசியம் எனவும் விவரித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை நாட்டின் முன்னேற்றத்திற்காக ராகுல்காந்தியின் கும்பம் பலத் தியாகங்களை செய்துள்ளதாகவும் புஷ்பா முன்ஜியால் கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரீத்தம் சிங்கை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து புஷ்பா முன்ஜியால் தனது உயிலை வழங்கினார்.
Newstm.in
Tags:
Next Story

