வயதான தம்பதி என்றும் பாராமல் ரஷ்ய படையினர் பீரங்கியால் தாக்கி அழித்த நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

வயதான தம்பதி என்றும் பாராமல் ரஷ்ய படையினர் பீரங்கியால் தாக்கி அழித்த நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

வயதான தம்பதி என்றும் பாராமல் ரஷ்ய படையினர் பீரங்கியால் தாக்கி அழித்த நெஞ்சை உருக்கும் வீடியோ..!!
X

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் வயதான தம்பதி வந்த காரை, ரஷ்ய படையினர் பீரங்கியால் தாக்கி அழித்த பதபதைக்க வைக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம், மார்ச் 1-ம் தேதி அன்று உக்ரைன் தலைநகர் கீவின் புறநகரில் நடந்ததாக கூறப்படுகிறது.

குறித்த வீடியோவில், சாலையில் வரும் பழுப்பு சிவப்பு நிற கார், எதிரே ரஷ்ய பீரங்கி இருப்பதை கண்ட உடன், கிட்டதட்ட 100 மீ தொலைவிலே நின்று விடுகிறது. எனினும், மின்னல் வேகத்தில் நேராக வந்த நின்ற ரஷ்ய பீரங்கி, காரை குறிவைத்து சரமாரியாக தாக்கி அழிக்கிறது.

இதில், காரில் இருந்து வயதான ஜோடி பரிதாபமாக பலியாகியுள்ளனர். காருக்குள் கணவர் தோளில் சாய்ந்த படி மனைவியும் இறந்து கிடக்கும் நெஞ்சை உருக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது.


உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா படைகள், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக அமைந்துள்ளது பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Tags:
Next Story
Share it