Theme Check

ஆன்லைன் ரம்மியின் கோர முகத்தால் மனைவியை கொன்று பிளாஸ்டிக் கவரில் மறைத்த கணவன்..!

ஆன்லைன் ரம்மியின் கோர முகத்தால் மனைவியை கொன்று பிளாஸ்டிக் கவரில் மறைத்த கணவன்..!

ஆன்லைன் ரம்மியின் கோர முகத்தால் மனைவியை கொன்று பிளாஸ்டிக் கவரில் மறைத்த கணவன்..!
X

திருச்சி மாவட்டதை சேர்ந்தவர் நரசிம்மராஜ். இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளான நிலையில், பிரதிக்ஷா (10), லக்‌ஷா (7) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நரசிம்மராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சமயபுரம் பகுதியில் குடியேறினார் திருச்சி திருவாணைக்காவல் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனியை திருமணம் செய்துள்ளார். இவர் டீக்கடை மற்றும் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் சமயபுரம் சக்திநகரில் புதிதாக வீடு கட்டிய அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த வீட்டை ரூ. 28 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். பின்னர் தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய் நகரில் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். இந்த பணத்தை நரசிம்மராஜ் வீணாக செலவு செய்துள்ளார். இதற்கு அவரது மனைவி சிவரஞ்சனி எதிர்ப்பு தெரிவிக்க இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Trichy

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், மனைவியை அடித்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் தாய் மற்றும் 2 குழந்தைகளை ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்ற நரசிம்மராஜ், குழந்தைகளை அக்கா விட்டிலேயே விட்டு தாயுடன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் சிவரஞ்சனிக்கு அவரது தாய் போன் செய்த போது சுவிட் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் தாளக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டிய நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்து வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்த போது, பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றியநிலையில் இருந்த சடலத்தை பிரித்து பார்த்த போது சிவரஞ்சனி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

dead

இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மியின் கோரமுகத்தால் நிகழ்ந்த விபரீதம் அம்பலமானது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள நரசிம்மராஜை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரமாநிலம் விரைந்து சென்றது.

Next Story
Share it