ஷூ லேஸால் மனைவி கழுத்தை இறுக்கி கொன்ற கணவன்!!

ஷூ லேஸால் மனைவி கழுத்தை இறுக்கி கொன்ற கணவன்!!

ஷூ லேஸால் மனைவி கழுத்தை இறுக்கி கொன்ற கணவன்!!
X

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் தியாகி மாணிக்கம் தெருவை சேர்ந்த சுலைமான் (40) - மும்தாஜ் (35) தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

சுலைமான் அதே பகுதியில் உள்ள தனியார் கேஸ் ஏஜன்சியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சுலைமானுக்கு அவரது மனைவி மும்தாஜ் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சுலைமான் சந்தேகத்தின் பேரில் மனைவி மும்தாஜுடன் தகராறில் ஈடுபட்டார்.

wife-murder

அப்போது ஆத்திரத்தில் திடீரென, அருகே இருந்த ஷூ லேஸால் மனைவி மும்தாஜ் கழுத்தை இறுக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்ததைக் கண்ட சுலைமான் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துார்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் வீட்டில் இருந்த சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுலைமானை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருமணமாகி 17 ஆண்டுகளுக்கு பின் மனைவி நடத்தையின் மீது எழுந்த சந்தேகத்தால் கணவனே ஷூ லேசால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it