Theme Check

கற்புக்கரசி என நிரூபிக்க கூறிய கணவன்.. கையில் கற்பூரம் ஏற்றிய பெண்ணுக்கு நடந்த விபரீதம் !

கற்புக்கரசி என நிரூபிக்க கூறிய கணவன்.. கையில் கற்பூரம் ஏற்றிய பெண்ணுக்கு நடந்த விபரீதம் !

கற்புக்கரசி என நிரூபிக்க கூறிய கணவன்.. கையில் கற்பூரம் ஏற்றிய பெண்ணுக்கு நடந்த விபரீதம் !
X

பெண் ஒருவர் தான் கற்புக்கரசி என நிரூபிக்க கையில் கற்பூரம் ஏற்றிய நிலையில் பின்னர் நடந்த விபரீதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் ஆனந்த் என்பவர் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டார். தொடக்கத்தில் நன்றாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் பெரும் அடியாக விழுந்தது சந்தேகம்.

kallakadhal

கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் ஆனந்த்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக கூறிவந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆனந்த் தனது மனைவியிடம் உனது நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை போக்க கையில் கற்பூரம் ஏற்றி நீ கற்புக்கரசி என நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை ஏற்று ஆனந்தின் மனைவியும் தனது உள்ளங்களையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளார். அப்போது தீ அவரது கை முழுவதும் பரவி எரிந்து அவரது கை கருகிவிட்டது. ஆனாலும் ஆனந்த் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை என்று தெரிகிறது.

kallakadhal

இதுபற்றி அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆனந்தின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஆனந்த் மீது வேம்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it