போலி மருத்துவரால் பறிபோன சிறுமியின் உயிர்!!
போலி மருத்துவரால் பறிபோன சிறுமியின் உயிர்!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக்கின் 5 வயது பெண் குழந்தை லட்சிதாவுக்கு சளி பிடித்ததை அடுத்து வேப்பூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர் சத்தியசீலன் குழந்தைக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்துள்ளார். குழந்தையை அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் உடல்நிலை மோசமாகவே வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தை லட்சிதா உயிரிழந்தார்.
வேப்பூர் காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்த சத்தியசீலனின் பதிவெண் சான்றிதழ்களை அரசு மருத்துவர் கேட்டுள்ளார்.

சத்தியசீலன் கொடுக்க மறுத்து விசாரணைக்கு பயந்து ஓடிவிட்டார். அதன் அடிப்படையில், நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தமிழரசன் வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அதே போல் குழந்தையின் தந்தையும் புகாரளித்தார்.
விசாரணையில் சத்தியசீலன் சான்றிதழில் உள்ளவர் திருச்சியை சொந்த ஊராக கொண்டவராகவும் பிரான்ஸ் நாட்டில் பணி ஆற்றுவதாகவும் கூறப்படுகிறது. அவரது சான்றிதழை பயன்படுத்தி மோசடி செய்து வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் தப்பிச்சென்ற சத்தியசீலனை தேடிவருகின்றனர்.
newstm.in

