Theme Check

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த லாரி – மூவர் பலி!!

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த லாரி – மூவர் பலி!!

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த லாரி – மூவர் பலி!!
X

இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி பகுதியில் இன்று அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேராக அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது.

இந்த கோர விபத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூடுதல் எஸ்.பி. ஆசிஸ் சர்மா தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

hp accident1

நேற்று இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு பகுதியில் 40 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சைன்ஜ் நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தது.

நியோலி - ஷன்ஷேர் சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சைன்ஜ் பள்ளத்தாக்கின் ஜங்லா பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 10 பேர் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று மண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேராக அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it