கள்ளகாதலுக்காக கணவனுக்கு விஷம் கலந்து பாலை கொடுத்த அன்பு மனைவி..!!
கள்ளகாதலுக்காக கணவனுக்கு விஷம் கலந்து பாலை கொடுத்த அன்பு மனைவி..!!

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழ்நாடு எல்லையான காரைக்காடு கிராமத்தில் வசித்து வந்த சக்திவேல் (37) என்பவருக்கு புகழரசி (27) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சக்திவேல் திடீரென இறந்து விட்டதாக அவரது மனைவி புகழரசி அவரது உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல்வின் தம்பி முத்துசாமி, தனது அண்ணன் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் போலீசார், மர்மமான முறையில் உயிரிழந்த சக்திவேலின் சடலத்தை மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், புகழரசிக்கும், பக்கத்து வீட்டு இளைஞர் முத்துக்குமாருக்கும் (29) உறவு இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கொளத்தூர் போலீசார் சக்திவேல் மனைவி புகழரசி மற்றும் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

புகழரிசி அளித்த வாக்குமூலத்தில், தனக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத்தொடர்பு இருந்துள்ளதால், சக்திவேல் தன்னை பலமுறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புகழரசியும் முத்துக்குமாரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு வந்த சக்திவேலுக்கு தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து புகழரசி அவரை மயக்கமடையச் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து குடிக்க விஷம் கலந்து பாலை கொடுத்தபோதும் சக்திவேல் உயிர் பிழைத்துக் கொள்ளாமல் இருக்க மீண்டும் விஷம் கலந்த உணவை சக்திவேலுக்கு மயக்க நிலையிலேயே கொடுத்து கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சக்திவேலின் மனைவி புகழரசியைத் தொடர்ந்து முத்துக்குமாரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

