குழந்தைக்கு மதுபானம் கொடுத்து கொலை செய்த தாய்.. விசாரணையில் பகீர் பின்னணி !
குழந்தைக்கு மதுபானம் கொடுத்து கொலை செய்த தாய்.. விசாரணையில் பகீர் பின்னணி !

முறையற்ற உறவிற்காக பெற்ற பச்சிளம் குழந்தையை மதுபானம் கொடுத்து தாயே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியில் கீதா (38) என்பவர் வசித்து வருகிறார். ஏற்கனவே, இரண்டு முறை திருமணம் முடிந்தும் அவர்களிடம் இருந்து பிரிந்த கீதா, மூன்றாவதாக கோவையை சேர்ந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு நித்தீஷ் (3) மற்றும் நித்தின் (1) என்ற இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கார்த்திக் - கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியினர் தனித்தனியாக வசித்து வருகின்றனர். கார்த்திக் 3 வயது மகன் நித்திசுடன் கோவைக்கு குடி பெயர்ந்தார். கீதா ஒரு வயது நித்தினுடன் உதகையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி குழந்தை திடீரென்று மயங்கி விழுந்து குழந்தை உயிரிழந்துவிட்டது.
குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், புகாரின்பேரில் ஊட்டி நகர போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
குழந்தையின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு அளவிற்கு அதிகமாக உணவை வாயில் திணித்து மூச்சு திணறவைத்தும், உணவில் மதுபானம் கலந்து கொடுத்தும் உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. மேலும் குழந்தையின் தலையில் காயம் இருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கீதாவிடம், மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு வேறு சில ஆண்களுடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்து விட்டு நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து உதகை காவல் துறையினர் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவிற்காக பெற்ற பச்சிளம் குழந்தையை தாயே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

