Theme Check

மாமியார் வீட்டுக்கு சென்றவர் வெட்டிக்கொலை !!

மாமியார் வீட்டுக்கு சென்றவர் வெட்டிக்கொலை !!

மாமியார் வீட்டுக்கு சென்றவர் வெட்டிக்கொலை !!
X

மாமியார் வீட்டின் அருகே டீ குடிக்கச் சென்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (35). பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம்வந்த இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். பின்னர் மாமியார் வீட்டு அருகில் உள்ள தேனீர் கடைக்குசென்று, டீ குடிக்க இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென புண்ணிய மூர்த்தியை சுற்றிநின்று சரமாரியாக வெட்டியுள்ளனர்.

dsfsdg

அவர் சுதாகரித்து தப்பி ஓடுவதற்குள் அக்கும்பல் கொலைவெறியுடன் தாக்கியதில் இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த புண்ணியமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் கடையில் இருந்தவர்கள், அப்பகுதியில் நின்றவர்கள் அச்சத்தில் உறைந்தனர். சிலர் சிதறி ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், புண்ணியமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

dg

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணங்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடியா கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

newstm.in


Next Story
Share it