Theme Check

அடுத்த முதல்வர் உதயநிதி தான்.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆரூடம்..!

அடுத்த முதல்வர் உதயநிதி தான்.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆரூடம்..!

அடுத்த முதல்வர் உதயநிதி தான்.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆரூடம்..!
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது; “இன்னும் 20 ஆண்டுகள் வரை மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர்.

கருணாநிதிக்கு பின்பு மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதைப்போல், அவருக்குப் பின்பு உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக தயாராக உள்ளார். வாரிசாக இருந்தாலும் இருவரும் பல சிரமங்களைத் தாண்டியே மேலே வந்துள்ளனர்.
வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி  ஸ்டாலின் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - BBC News தமிழ்
திமுகவை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை முதலில், நீங்கள் (அதிமுக) அனைவரும் ஒன்று சேர்ந்து சண்டைக்கு வாருங்கள். கடந்த 10 வருடம் கேடு கெட்ட ஆட்சி நடைபெற்றது. அதிமுக கஜானா-வை சுரண்டி விட்டது.

நமது ஆட்சி நல்ல ஆட்சி; நமது முதலமைச்சர் நல்ல முதலமைச்சர். ஒவ்வொரு குடும்பத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். டெல்லிக்கு பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை” என பேசினார்.

Next Story
Share it