Theme Check

இந்த மாவட்டங்களில் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த மாவட்டங்களில் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த மாவட்டங்களில் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை
X

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாா்ச் 18ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பங்குனி உத்திர திருநாள் மாா்ச் 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் முக்கியத் தோ்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது, என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 18.03.2022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

pankuni uththiram

மார்ச் 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பங்குனி 4ஆம் தேதி பெளர்ணமி தினத்தில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், மீனாட்சி திருக்கல்யாணம், பரமேஷ்வரன் பார்வதியையும், ராமன் சீதையையும், முருகன் தெய்வானையையும் கரம் பிடித்தார் என்று பல்வேறு புராணக் கதைகள் நமக்கு கூறுகின்றன.

முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதற்காக விரதமிருந்த பக்தர்கள் பால், பன்னீர், பூ காவடிகளை ஏந்தி முருகனின் கோயில்களுக்கு பாதயாத்திரை சென்று வழிபாடு செய்வார்கள்.

newstm.in

Next Story
Share it