Theme Check

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. இப்போது கொடுத்தது உணவக உரிமையாளர் சங்கம்..!

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. இப்போது கொடுத்தது உணவக உரிமையாளர் சங்கம்..!

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. இப்போது கொடுத்தது உணவக உரிமையாளர் சங்கம்..!
X

இந்தியாவில், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2406 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வால், தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பண்டங்களின் விலையும் 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை உணவக சங்க செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசு தொடர்ந்து எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தி வருவதால் உணவக தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு 1200 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல் காய்கறி, சமையல் எண்ணெய், அரிசி, பருப்புகள் விலையும் உயர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டைவிட உணவுப் பண்டங்கள் தயாரிப்பில் 20 சதவீதம் வரை செலவுகள் அதிகரித்துள்ளன.

இந்த செலவினங்களை ஈடுகட்ட உணவுப் பண்டங்களின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. இதுகுறித்து உறுதியான முடிவு எடுக்க இன்று (6-ம் தேதி) உணவக உரிமையாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு குறித்து முடிவு செய்யப்படும். டீ, காபி முதல் அனைத்து உணவுப் பொருட்களும் 20 சதவீதம் வரை உயர்த்தப்படலாம். அதன் பிறகு படிப்படியாக சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்தப்படும்.

சென்னையில் மொத்தம் உள்ள 15000 உணவகங்களில் உணவிற்கு பயன்படுத்தும் மூலப்பொருட்கள், செலவினங்கள், வாடகைக்கு ஏற்ப உணவின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில், நடுத்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் இட்லி, தோசை, பூரி போன்ற டிபன் வகைகள் 5 ரூபாய் வரை உயர்த்தப்படும். அதுபோல், சாப்பாடு, பிரியாணி போன்ற உணவு வகைகள் 20 ரூபாய் வரை உயர்த்தப்படலாம்.

மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு, உணவகங்களுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கினால் மட்டுமே விலை ஏற்றத்தை தவிர்க்க முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it