Theme Check

மக்களுக்கு அடுத்த சோதனை.. மின் கட்டணமும் உயரப்போகிறது.. மத்திய அரசு ஒப்புதல் !

மக்களுக்கு அடுத்த சோதனை.. மின் கட்டணமும் உயரப்போகிறது.. மத்திய அரசு ஒப்புதல் !

மக்களுக்கு அடுத்த சோதனை.. மின் கட்டணமும் உயரப்போகிறது.. மத்திய அரசு ஒப்புதல் !
X

கோடை தொடங்கிவிட்டதால் நாடு முழுவதும் மின்சார பயன்பாட்டின் தேவை அதிகரித்துவிட்டது. இதனால் மத்திய அரசு, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் அண்மைக்காலமாகவே நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. அதாவது, நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 500 க்கும் குறைவாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மின்சாரம் தேவை அதிகரித்துள்ளதால், தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

nilakkari

எனவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையை பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகின்றன. ஏற்கனவே நிலக்கரி தட்டுப்பாடு இருந்த நிலையில் மின் தேவை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது சாமானிய மக்களுக்கு பெரும் அடியாக அமையும் என தற்போதே எதிர்ப்பு எழுந்துள்ளது.

newstm.in

Next Story
Share it