இரவு நேர ஊரடங்கு வாபஸ்.. எனினும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த மாநில அரசு
இரவு நேர ஊரடங்கு வாபஸ்.. எனினும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த மாநில அரசு

ஆந்திராவில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவுநேர ஊரடங்கு விதித்தது.
மேலும் திருமணம், காதுகுத்து, பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. திரையங்குகளில் 50 பேர் மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடிருந்தன. கடந்த ஜன. 18 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளை நீக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது .
எனினும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும், விதிகளை மீறுவோரிடம் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், விதிகளை மீறினால் 10,000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது . இந்த உத்தரவு வரும் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
newstm.in

