Theme Check

பிரமாண்டமாக தயாராகி வரும் தேசபக்தி கோட்டை!!

பிரமாண்டமாக தயாராகி வரும் தேசபக்தி கோட்டை!!

பிரமாண்டமாக தயாராகி வரும் தேசபக்தி கோட்டை!!
X

இளைஞர்களிடம் தேசபக்தியை விதைக்கும் முயற்சியாக கோவையில் தேசபக்தி கோட்டை பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவது நம் கடமை. சுதந்திர தின விழா, குடியரசு தின விழா உள்ளிட்ட தினங்களில் மத்திய மாநில அரசுகளின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

இந்நிலையில் கோவையில் தேச விடுதலைக்காக போராடியவர்களையும் நினைவு கூறும் விதமாகவும், இளைய தலைமுறையினரிடம் தேசபக்தியை விதைக்கும் விதமாகவும் ஜெய்ஹிந்த் அறக்கட்டளை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

cbe 1

நிரந்தரமாக சுதந்திர அடையாளத்தை பேணிக்காக்கும் விதத்தில் கோவை - பாலக்காடு சாலையில் உள்ள ..சாவடியில், 8.5 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் 1.5 ஏக்கரில் 'தேசபக்திக்கோட்டை' என்ற பிரமாண்டமான கோட்டையை இந்த அறக்கட்டளை கட்டி வருகிறது.

இங்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 175 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் நிரந்தரமாக வைக்கப்பட உள்ளது. இது நிரந்தரமான கண்காட்சி மையமாகவும் அமைய உள்ளது.

இந்தக் கோட்டை நுழைவாயில் முன்பு 75 அடி உயரமுள்ள கம்பத்தில் 24 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it