Theme Check

பொறுமையின் உச்சம்.. கத்தியை பறித்து கணவனை வெட்டிக்கொன்ற மனைவி !!

பொறுமையின் உச்சம்.. கத்தியை பறித்து கணவனை வெட்டிக்கொன்ற மனைவி !!

பொறுமையின் உச்சம்.. கத்தியை பறித்து கணவனை வெட்டிக்கொன்ற மனைவி !!
X

குடிபோதையில் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட கணவனை மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல்(60). லாரி ஷெட்டில் வேலை செய்துவந்த இவர் மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இவருக்கு மனைவி கோமதி(48) மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் குமரவேல் வழக்கம்போல் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து அதிகாலை 1 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி கோமதியை குமரவேல் திடீரென தாக்கியுள்ளார்.

fds

இந்த தகராறில் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்களாம். அப்போது வீட்டில் இருந்த கத்தியால் கோமதியை குமரவேல் வெட்டியுள்ளார். இதில் கோமதிக்கு நெற்றி மற்றும் கையில் வெட்டு விழுந்தது. அப்போது தடுக்கவந்த மகளையும் குமரவேல் கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கோமதி, அந்த கத்தியை பறித்து கணவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கோமதி வேலூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it