இரவில் நடுங்கிய ஊர்மக்கள்.. மனைவியை உயிருடன் தீவைத்து எரித்த கொடூர கணவன் !!
இரவில் நடுங்கிய ஊர்மக்கள்.. மனைவியை உயிருடன் தீவைத்து எரித்த கொடூர கணவன் !!

சென்னை வளசரவாக்கம், பெத்தானியா நகர் பகுதியில் ராஜா- ராதா தம்பதி வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தான் இந்த தம்பதி பெத்தானியா நகரில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்துவந்தனர். ராஜா பெயிண்டராக வேலை செய்து வந்த நிலையில், ராதா கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
மனைவி ராதா மீது ராஜாவுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது. இதனால் கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கணவன் மனைவிக்கு மீண்டும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மனைவியின் உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

அப்போது தீக்காயமடைந்த ராதா வலியால் அலறிதுடித்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார், கணவர் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in

