Theme Check

துடிக்க மறுத்தது பன்றியின் இதயம்.. மாற்று இதயம் பொருத்தப்பட்டவர் மரணம்..!

துடிக்க மறுத்தது பன்றியின் இதயம்.. மாற்று இதயம் பொருத்தப்பட்டவர் மரணம்..!

துடிக்க மறுத்தது பன்றியின் இதயம்.. மாற்று இதயம் பொருத்தப்பட்டவர் மரணம்..!
X

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் முதன் முதலாக பொருத்திக் கொண்ட நபர் இரண்டு மாதங்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் டேவிட் பென்னட் (57). தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்ட பென்னட்டின் உடல் மனிதனின் இதயத்தை மாற்று இதயமாக பெற ஒத்துழைக்கவில்லை.

அவரது மோசமான உடல்நிலை காரணமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி அன்று அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் வைத்து டேவிட் பென்னட்டுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது.
உலகிலேயே முதல் முறையாக பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டுள்ளது –  Makkal Osai – மக்கள் ஓசை
இந்த சிகிச்சைக்கு பிறகு, பன்றியின் இதயத்தை பெற்றுக்கொண்ட டேவிட் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார் என்றும், அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இரண்டு மாதம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த டேவிட் பென்னட், துரதிருஷ்டவசமாக கடந்த 8-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகளுக்கு இருக்கும் டிமாண்ட் இதன் மூலம் வரும் நாட்களில் தீரலாம் என்ற நம்பிக்கையை இந்த சிகிச்சை ஏற்படுத்தியது.

தற்போது இந்த சிகிச்சையை செய்து கொண்டவர் உயிரிழந்திருந்தாலும் வரும் நாட்களில் இது நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக இந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it